Posts

Showing posts from July, 2007

நினைவுக் கவிதை [19-07-2007 மூன்றாம் ஆண்டு நினைவு]

Image
சின்னப் பெண்ணே நீ மறைந்து மூன்றாண்டாம் உன் நினைவு மட்டும் எப்படி இன்னும் எல்லோர் மனதிலும் முரண்டு பிடித்து முக்காலி போட்டு உட்கார்ந்து இருக்கின்றது? பக்கத்தில் இருந்து பார்த்துப் பழகியறியாதவன் நான்... இருந்தும் செவிவழி கேட்டு நிழற்படத்தில் பார்த்துத் தெரிந்த எனக்குள்ளும் எப்படி நீ விஷ்வரூபமானாய்? வாழ்க்கை விசித்திரம் தான் வந்து போகும் உறவுகளும் அப்படியே... யாரோ கிழித்த கோட்டில் நீயும் நானும் எப்படிச் சொந்தங்களானோம்? சாவு அருமையான விஷயம்! இறப்பது தெரிந்தும் 'நிரந்தர இருப்பு' அனுமதி பெற்றது போல செய்யும் செயல்களில் தான் எத்தனை முரண்பாடு? குட்டிப் பெண்ணே நினைவுச் செதில்கள் குற்றி கண்கள் குளமாகின்றது உண்மை தான் ஆனாலும் வெறும் வார்த்தை ஜாலங்களில் பாசாங்கு செய்யப் பிடிக்கவில்லை மறுபிறவி உண்டெனின், எனக்கு மகளாய் வந்து பிறவேன் மகிழ்ந்து விளையாடலாம்! எவ்வளவு அழகாய் முடிச்சுக்கள் விழுகின்றது... வாழ்க்கை அழகு தான் அவரவர் புரிதல் படி! பெண்ணே நினைவுக் கவிதை என்று நினைத்து தான் தொடங்கினேன் ஆனால் வாழ்க்கையின் வடிவான பக்கங்களைப் புரட்டத் தொடங்கிவிட்டேன் உதிருகின்ற பூக்களைப