காத்திருப்பு…!

image

திரை விலத்தக்
குறைவில்லாது
காற்று வரும்...

காதலும் வந்ததெப்படி
காதலனே?

பிறை போலிருந்த
அம்புலி வளர்ந்து
முழு நிலவானது போல்...
சிறு
கறை போலிருந்த
உன் உருவம்
ஓங்கி வளர்ந்து
என்னுள்ளம் நிறைத்த
விந்தையென்ன
சொல்...!

தினமும் திரை விலத்திச்
சிலை போல்
காத்திருக்கிறேன்...
உனக்காய்...

மனச்சாட்சி மறக்கும்
மனிதச் சாட்சிகளை விட
மகத்தான இயற்கையே
இதற்குச் சாட்சி!

நான் காத்திருக்கின்ற
இரவுகளில்
பார்த்துவிட்டுப் போகும்
நிலவைக் கேள்...
அவ்வப்போது நிலவைக்
கொற்றித் தின்பதாய்
பறக்கும் பட்சிகளைக்
கேள்...

அவை சொல்லும்
என் காத்திருப்பின்
நீண்ட இரவுகள் பற்றி!

 

-------------------------

23 புரட்டாதி 2008

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை