பிள்ளைத் தமிழ்!

கற்ற தமிழ் நான்
மறந்தேன்
உன் பிள்ளைத்தமிழ்
கேட்கையிலே!

சொற் தமிழில்
எத்தனை சுவை இறைவா
இவள் சின்ன இதழில்
அது பிறப்பதாலே!

அப்பன் மடியில் அமர்ந்து
பிரணவப் பொருள்
உரைத்தான்
பால முருகன் அன்று

குப்பன் இவனும் இன்று
அப்பேறு பெற்றானே
ஆனால் பொருள் தான்
எதுவும் விளங்கலையே!

விளங்காத போதும்
குறையாத இன்பம்
எனக்குள் நிறைகிறதே

வாழ்வதின் இன்பம்
இது தான் எனப் புரிகிறதே!

Comments

யாழினிது குழலினிது என்பர் தம் மழலைச் சொல் கேளாதார் என்ற
உணர்வை மீண்டும் உறுதிப்படுத்திய அருமையான கவிதை வரிகள்
வாழ்த்துக்கள் சகோ .
மொழி புரியாத உணர்வும் அருமைதான் ஐயா!
அம்பாளடியாள் மற்றும் தனிமரம் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்...
விளங்காத போதும்
குறையாத இன்பம்
எனக்குள் நிறைகிறதே

வாழ்வதின் இன்பம்
இது தான் எனப் புரிகிறதே!

அழகாகச் சொன்னீர்கள் நன்று.

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்